நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் திருத்தம் செய்யப்பட்ட கட்டிடங்கள் எதிர்வரும்புதன்கிழமை (பெப்ரவரி 19) மதியம் 01.00 மணிக்கு வித்தியாலய முதல்வர்ஜயாத்துரை தயாபரன் தலமையில் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
பாடசாலை அலுவலகம், மாநாட்டு மண்டபம், ஆசிரியர் ஓய்வறை மற்றும்சிற்றூண்டி சாலை என்பன அன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டு மற்றும் இளைஞர்விவகார அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிரஞ்சன் அவர்கள் கலந்துசிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு அதீதிகளாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களும் தீவக கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் ரி.ஞானசுந்தரம்அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்
இக்கட்டிட திறப்பு விழாவினை தொடர்ந்து மதியம் 2.00 மணிக்கு வருடாந்தஇல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வும் இடம் பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.