நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை முன்பாக உள்ள பயணிகள் தங்குமிடம் பிரதேச வைத்தியசாலை ஊழியர்களால் சிரமதானம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை முன்பாக உள்ள வடக்கு மாகாண சபை நிதியில் அமைக்கப்பட்ட பயணிகள் தங்குமிடம் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை ஊழியர்களால்  துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் பேரூந்திற்காக தரித்திருந்து செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லாமல்  அத்தரிப்பிடம் பற்றைகள் வளர்ந்து பாவனையற்ற நிலையில் காணப்பட்டமையினால் நோயாளர் நலன்கருதி இப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு தெரியப்படுத்தியும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

வைத்தியசாலை பகுதியோடு உள்ள மற்றுமொரு  தரிப்பிடம் பயணிகள் பவனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article