நெடுந்தீவு பிரதேச சபை பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு – “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 இல் சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  05 ஆம்  நாள் (ஆகஸ்ட்08)  நிகழ்வில்  நெடுந்தீவு பிரதேச சபை பொது நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு யாழ் இந்திய துணை தூதரகத்தினால்  வழங்கப்பட்டது.

நெடுவூர்த் திருவிழாவில் கலந்து கொள்ளவந்த யாழ் இந்திய துணைத்தூதுவரினால் நூலத்தில் இடம்பெறும் இலக்கிய கண்காட்சியில் வைத்து ஒருதொகுதி நூல்கள் வைபவ ரீதியாக நூலகரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வுகளில் யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி,  வடமாகாண பொலிஸ் அதிகாரி மற்றும் உள்ளூர் , புலம்பெயர் உறவுகள் , என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article