நெடுந்தீவு பண்பாட்டு விழா 2024 இல் சிறப்புற நடந்த நெடுங்கீற்று VI மலர் வெளியீடு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நெடுந்தீவில் நடாத்திய பண்பாட்டு விழா – 2024 இல் நெடுங்கீற்று VI மலர் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் திருமதி நிவேதிகா கேதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  நெடுங்கீற்று VI மலரினை  நிகழ்வின் பிரதம விருந்தினரும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான ம.பிரதீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க அதன் முதற் பிரதியினை நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் வ. சுபாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலிற்கான வெளியீட்டுரையினை நெடுந்தீவு கலாச்சார பேரவை உப தலைவர் செ. மகேசு அவர்களும்

நூல் ஆய்வுரையினை இந்து கற்கைகள் பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனேகரன் அவர்களும்

ஏற்புரையினை நெடுந்தீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அ.சிவஞானசீலன் அவர்களும்

மேற்கொண்டிருந்ததுடன் விருந்தினர்களுக்கான சிறப்புப் பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article