நெடுந்தீவு தென்கிழக்கில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலயத்தின் வருடாந்த மகா திருக்குளிர்த்தி விழா எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 21) இடம்பெறவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான திருக்குளிர்த்தி, பொங்கல் , தீமிதிப்பு என்பவை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
திருக்குளிர்த்தியை சிறப்பிக்கும்வகையில் திங்கட்கிழமை (ஜூலை 21) மாலை 5.00 மணிக்கு ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள குயிந்தா சவாரித்திடலில் மாட்டுவண்டில் சவாரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் , அன்னதானம்,திருக்குளிர்த்தி விழா, பொங்கல் விழா, மடைபரவல் ,சுவாமி வீதியுலா மற்றும் தீமிதிப்பு, நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல், மற்றும் ஏலவிற்பனை என்பன இடம்பெறவுள்ளமை சிறப்பாகும்.