நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட சந்தைசெயற்பாட்டு நிகழ்வு நேற்றையதினம் (ஜூன் 06) முன்பள்ளி வளாகத்தில்சிறப்பாக இடம்பெற்றது.
சிறார்களின் செயற்பாட்டு நிகழ்வில் நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சந்தை நிகழ்வினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசசெயலக முன்பிள்ளைபருவ மேம்பாட்டுஉத்தியோகத்தர் , நெடுந்தீவு முன்பள்ளிகளின் இணைப்பாளர், முன்பள்ளிகளின்ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.