நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வுகள்- “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் 04 இல் சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  05 ஆம்  நாள் நிகழ்வாக நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க. வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் அரும்பொருட்களின் கண்காட்சி மற்றும் மாதிரி விற்பனைச் சந்தை கண்காட்சி  என்பன இன்றைய நாள் (ஆகஸ்ட்08) விருந்தினர்களால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

05 ஆம் நாளாகிய இன்று (ஆகஸ்ட் 08) புலம் பெயர் உறவுகளின் ஒன்றிணைவு , இந்திய துணைத்தூதுவர், தூதரக அதிகாரி, வட மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி,  நெடுந்தீவு  பொலிஸ் அதிகாரி மற்றும் விருந்தினர்களின் இணைவுடன் இன்றைய நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ. த. க.  வித்தியாலயத்தின் தேவைகள் இனங்காணப்பட்டு அவற்றினை தீர்ப்பதற்கான உறவுகளின் சம்மதமும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வுகளில் பெற்றோர்கள்,  நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் உறவுகள் , விருந்தினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article