நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வும் , அதனைத் தொடர்ந்து வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு10 என்பன எதிர்வரும் சனிக்கிழமை (18.01.2025) காலை 8.00 மணிமுதல் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ளஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 10 இல்இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் அனைவரும் இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு நிலைய நிர்வாகத்தினரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.