நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 8

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நாளையதினம் (ஆகஸ்ட்19) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையஇரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராகஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல்மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின் அமர்வு – 8 இல் இடம்பெறவுள்ளது.

 

நிகழ்வின்  வளவாளராக நெடுந்தீவு கோட்டக் கல்வி அலுவலக அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி.மோகன்ராஜ் கலைவாணி அவர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article