நெடுந்தீவு கல்வி கோட்ட சாரண மாணவர்களுக்கு 03 நாள் பயிற்சி நிறைவில் சின்னம் சூட்டல்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கோட்டப் பாடசாலைகளின் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி முகாமின் இறுதிநாள் நிகழ்வுகள்  இன்றையதினம் (ஜூலை27) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது .

இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரால் முன்னெடுக்கப்பட்ட முழுமையான மூன்று நாள் சாரண பயிற்சியில் ஈடுபட்ட சாரணர்கள், குருளைச் சாரணர்கள் ஆகியோருக்கு சின்னம் சூட்டப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

இப் பயிற்சி நெறியானது சாரணர்களுக்கு 03 தினங்களும், சாரண ஆசிரியர்களுக்கு 02 தினங்களும் என இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பயிற்சிநெறிக்கான வழிகாட்டலை வழங்கி நெறிப்படுத்திய யாழ் மாவட்ட பதில் அரச அதிபரும் , யாழ் மாவட்ட சாரண ஆணையாளருமான ம.பிரதீபன்அவர்களும் இன்று கலந்துகொண்டு பயிற்சி பெற்ற சாரணர்களுக்கான சின்னம் சூட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வுகளில் , யாழ் மாவட்ட சாரண பிரிவினர், நெடுந்தீவு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Share this Article