இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரால் முன்னெடுக்கப்பட்ட முழுமையான மூன்று நாள் சாரண பயிற்சியில் ஈடுபட்ட சாரணர்கள், குருளைச் சாரணர்கள் ஆகியோருக்கு சின்னம் சூட்டப்படும் நிகழ்வுக்கு மாணவர்கள் சாரண உடைகளுடன் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களுக்கான சாரண உடைகளுக்கான அன்பளிப்புக் கொடுப்பனவுக்கான காசோலை நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா அமைப்பினால் வழங்கப்பட்டு அதனை நெடுந்தீவு கிளையினர் மகா வித்தியாலய அதிபரிடம் வைபவ ரீதியாக கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு கோட்டப் பாடசாலைகளின் மாணவர்கள் சாரணர் பயிற்சி மூலம் நற்பிரஜைகளாக வளர வேண்டும் எனும் நல்லெண்ண நோக்குடன் முகாமின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வேளை இக் கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.