நெடுந்தீவு இளைஞன் கொலை தொடர்பாக தலைமறைவானோர் கைது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் நேற்று முன்தினம் (ஜூன்20) அதிகாலையில் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞனின் கொலையுடன் சம்பத்தப்பட்ட 03 சந்தேக நபர்களும் நேற்று (ஜூன்22)  மாலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (ஜூன்22) தேடும் நடவடிக்கைக்காக மேலதிக பொலிசார் நெடுந்தீவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுடன் நெடுந்தீவு இளைஞர்களும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதேவேளை குற்றப் புலனாய்வுத் துறையினரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் தலைமறைவாகி இருந்த சந்தேக நபர்கள்  மூன்று பேரும் கைது செய்யப்பட்டு உடனேயே விசேட படகுமூலம் நெடுந்தீவை விட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article