நெடுந்தீவுக்கான குடிநீர் விநியோகம் நாளை (ஆகஸ்ட் 28) வழமைக்கு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் நெடுந்தீவு பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுவரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் நாளை  (ஆகஸ்ட் 28) வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக இன்றையதினம்  (ஆகஸ்ட் 27) விநியோகம் இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளின் பின்னர் நாளை முதல்  குடிநீர் விநியோகம் சீராக  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article