நெடுந்தீவு பிரதேசத்துக்கான உள்ளூர் போக்குவரத்து சேவை நாளை (மார்ச் 28) முதல் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக வட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்றையதினம்(மார்ச் 27) கடற்படையினரின் தரையிறங்கு படகு மூலம் நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவு பிரதேசத்துக்கான உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து கடந்த சில வாரங்களாக பயணிகள் சேவையில் ஈடுபடாமல் நெடுந்தீவு மாவிலி துறைமுகப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பேருந்து பழுதடைந்த நாள் தொடக்கம் மக்கள் குறிப்பாக மேற்கு பகுதி மக்கள் உள்ளூர் பயண சேவைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தீவிலிருந்து வெளிச்செல்வோர் மற்றும் உள் வருகின்றவர்களும், தங்கள் சொந்த இடங்களுக்கு செல்பவர்களும், வைத்தியசாலை செல்பவர்களும், அரச திணைக்களங்களில் வேலை செய்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பெரும் பணச் செலவில் வாடகை வாகனங்களை அமர்த்தி சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.