நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் இணைந்த முன்னெடுப்புடன் பனைஅபிவிருத்தி சபை பனைசார் உற்பத்திக்கான முழுமையான பயிற்சி திட்டத்தைநெடுந்தீவில் வழங்க முன்வந்துள்ளது.
பனை சார் அபிவிருத்தியில் ஆர்வம் உள்ளோரும் குறிப்பாக பனை சார் உற்பத்திதொடர்பான பயிற்சியை பெற விரும்புவோர் அனைவரும் தங்கள் விபரங்களைஎதிர்வரும் டிசம்பர் 13 வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன அலுவககத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெடுந்தீவில் பனைத்திருவிழாவும் பனம் பொருள் உற்பத்திகண்காட்சியும் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.