வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்வு இன்றையதினம் (ஜனவரி18 ) நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் இரகுபதி நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ளஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின் வளவாளராக ஓய்வுநிலை ஆசிரியை திருமதி தயாநிதி தர்மரத்தினம் அவர்கள் கலந்துகொண்டு சிறார்களுக்கான கருத்துரைகளினை வழங்கியிருந்தார்.
வள்ளித் தமிழ் அமுதம் செயற்பாட்டு குழுவினர் இந்நிகழ்வுக்கான அனுசரணையினை வழங்கிவருகின்றனர்.
இந்நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.