நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேரின் இறுதிக் கிரியைகள் இன்றும் ஏனைய இருவரின் இறுதிக்கிரியைகள் நாளையும் நடைபெறவுள்ளன.
நெடுந்தீவில் கொலைசெய்யப்பட்டோரில் முல்லைத்தீவு செல்வபுரம் வடக்கு வவுனிக்குளத்தைச் சேர்ந்த நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் 35 க்கு 1 பிரம்படி லேன் கொக்குவில் யாழ்ப்பாணத்திலுள்ள பாலசிங்கத்தின் சகோதரரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்ட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் இன்று 10 மணிக்கு நடைபெற்றன.
இதேவேளை இவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு பாண்டியன்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்ட சுப்பிரமணியம் மகாதேவாவின் சடலம் கிளிநொச்சி கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் இவரது இறுதிக்கிரியைகள் இன்று பகல் 10 மணிக்கு நடைபெற்றன.
ஏனைய இருவரது சடலங்களும் யாழ்ப்பாணத்திலுள்ள மலர்ச் சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் யாழ்பாணத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை (ஏப்ரல் 27) இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.