நெடுந்தீவிலுள்ள இரு பாடசாலைகளுக்கு உபகரணங்கள் அன்பளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அன்னை கடல் உணவு தனியார் நிறுவனத்தினரால் நெடுந்தீவில் உள்ள இரு உயர்தரப் பாடசாலைகளுக்கு  நேற்றைய தினம் (மே 31) உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு அவசியமான போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் குறித்த பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்- நாவாந்துறையில் உள்ள அன்னை கடல் உணவு தனியார் நிறுவனத்தினரால் வழங்கப்பட்ட உபகரணங்களை குறித்த நிறுவனத்தின் நெடுந்தீவுக்கான இணைப்பாளரால் இரண்டு பாடசாலை நிர்வாகத்தினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article