நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும் மரங்களையும் வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் (டிசம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை) நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
இதேவேளை இச் செயற்பாட்டினை மனித வலுவை வட இயந்திர வலுவூடாகவே செய்ய வேண்டிய நிலமை காணப்படுவதால் நாளைய தினம் அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டம் தொடரவுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியூடான போக்குவரத்து செய்வதில் மக்கள்எதிர்நோக்கும் இடர்பாடுகளை நீக்கும் வகையில் இச்செயற்பாட்டினைநெடுந்தீவில் உள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகளையும்ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடனும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட நலன்விரும்பிகளின் பங்குபற்றலுடன் இன்றைய வேலைகள் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.