நெடுந்தீவு பிரதேச மின்சார வழங்கலை சீராக்கும் வகையில் புதிய மின் இயந்திரங்கள் இரண்டு இன்றையதினம் (ஜனவரி 25) நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு பொருத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.
அதிக வலுவுடைய இரு இயந்திரங்களே மின்சார சபையினரின் உதவியுடன் கடற்படைகலம் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்டு மின்சார நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக நெடுந்தீவுக்கான மின்சார விநியோகம் 07 மணிநேர அட்டவணைப்படுத்தப்பட்ட மின்வெட்டுடன் இடம்பெற்று வந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.