நீண்ட நாட்களாக இறங்கு துறைமுகத்தில் தரித்து நின்ற நெடுந்தாரகை மக்களது போக்குவரத்து கடினத்தினை உணர்ந்து இன்றைய தினம் (December 10) காலையில் தனது சேவையினை ஆரம்பித்தது ஆயினும் அது பயணிகளுடன் நடுக்கடலில் பழுதடைந்து ஒருவாறு நெடுந்தீவுக் கரையினை சென்றடைந்துள்ளது.
வடக்கு மாகாணசபையினால் நெடுந்தீவு பிரதேச சபைக்க வழங்கப்பட்ட இப்படகு நீண்ட நாட்களாக பாவனையில் இல்லாது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் பட்டப்பட்டிருந்தது. இன்சுரஸ் மற்றும் ஊழியர்களுக்கான வேதனம் வழங்கப்படும் போதும் அப்படகிற்கு செலவு அதிகம் எனகருத்தி அதனை நிறுத்தம் செய்து வைத்திருப்பதால் பழுதடைகின்ற சந்தர்ப்பமே அதிகமாக காணப்படுகின்றது.
பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள் ஊடாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதற்கான மானியத்தினை அதிகரித்து மக்கள் சேவையை வழங்க முன்வரவேண்டும். படகு சேவை இடம் பெறாவிட்டாலும் அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் பிரதேசசபைக்கே உண்டு.