By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரம் ஜனாதிபதிடம் கையளிக்கப்படும்!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரம் ஜனாதிபதிடம் கையளிக்கப்படும்!
இலங்கைச் செய்தி

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரம் ஜனாதிபதிடம் கையளிக்கப்படும்!

Last updated: 2023/07/02 at 8:28 AM
Published July 2, 2023 229 Views
Share
2 Min Read
SHARE

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் அடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

கடந்த இருவருடகாலமாக அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் பல்வேறு தரப்பினர் ஆஜராகி சாட்சியமளித்திருக்கும் நிலையில், அந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைவாகவே தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கடந்த மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இறுதி அறிக்கையை அச்சிடும் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக ஆணைக்குழுவினால் மேமாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கமுடியாத நிலையேற்பட்டது. அதனையடுத்து அதற்கான ஆணை இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே இறுதி அறிக்கையின் தயாரிப்புப்பணிகள் அனைத்தும் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் வாரத்துக்குள் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுஇவ்வாறிருக்க தமது இடைக்கால அறிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம் எனவும், ஆணைக்குழுவின் ஆணையாளராக தமிழ் பேசக்கூடிய ஒருவரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்குமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali July 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஜுனில் பணவீக்கம் 12 சதவீதமாக வீழ்ச்சி – 3 ஆம் காலாண்டில் ஒற்றை இலக்கத்தை அடையுமென எதிர்வுகூறல்!
Next Article ஜனவரி மாதத்தில் மேலும் மின்கட்டணம் குறையும்!- மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?