வேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் நிதியுதவியில் அடைப்பொறி வழங்கல் .
புங்குடுதீவில் வாழ்கின்ற 13 குடும்பங்களின் தன்நிறைவு பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு.கருணாகரன் நாவலன் அவர்களின் தனிப்பட்ட நிதியில் ரூபாய் 60000 பெறுமதிமிக்க 13 கோழிக்குஞ்சு அடைப்பொறிகள் வழங்கிவைக்கப்பட்டன .
மேற்படி நிகழ்வில் தீவகம் தெற்கு உதவி பிரதேச செயலாளர் திரு . நடராஜா பிரணவன் , மூத்த சமூக செயற்பாட்டாளர் திரு. சுப்பிரமணியம் கருணாகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .