ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கர் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், நான்கு பதில் அமைச்சர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,
-
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதில் அமைச்சராக பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
-
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சராக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன
-
பாதுகாப்பு அமைச்சின் பதில் அமைச்சராக பிரதியமைச்சர் அருண ஜயசேகர
-
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பதில் அமைச்சராக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா
என்பவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.