நடந்து முடிந்த மரதன் ஓட்ட முடிவு “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்ஆகஸ்ட் 04 அன்று ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் இரண்டாம் நாள் (ஆகஸ்ட் 05) நிகழ்வாக மரதன் ஓட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இப்போட்டியில் ஆண், பெண் இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் இவர்களில் முதல் 05 இடங்களைப் பெற்ற வீர வீராங்கனைகளின் விபரம்.

ஆண்கள்
01. தோமஸ் அல்லின் கவிப்பிரியன்
02. றொபின்சன் கௌசிகன்
03. அருள்ராஜேஸ்வரன் அருள்ஜோசப்
04. கேதீஸ்வரன் கோபிசன்
05. ஆரோக்கியதாதர் சுஜீவன்

பெண்கள்
01. கௌசிகா
02. திலுக்‌ஷினி
03. சிந்துஜா
04. துஷாவதனி
05. மெர்சி

\

இன்று காலையில் நிகழ்வு இடம்பெற்ற வீதி எங்கும் ஊரின் உறவுகள் வீர வீராங்கனைகளுக்கு  பெரும் ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான போட்டி நெடுந்தீவு மேற்கு புதுக்கடையில் இருந்தும் ஆண்களுக்கான போட்டி பெரிய துறையிலும் ஆரம்பமாகி நெடுந்தீவு மாவிலித்துறை தனிநாயகமடிகள் சுற்றுவட்டத்தில் நிறைவடைந்தது.

Share this Article