தொண்டைமானாறு அக்கரைக் கடலில் குளித்தவர் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொண்டைமானாறு அக்கரைக் கடலில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது.

தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா (வயது-75) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் உடல் நேற்று(ஓகஸ்ட் 9) இரவு மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அச்சுவேலிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.

Share this Article