தீவகம் வடக்கு பிரதேசசபையின் கௌரவ உறுப்பினர் திருமதி.வின்ஷன் சுபத்திரா அவர்கள் நேற்றைய தினம் (ஏப்ரல் 17) மாரடைப்பினால் மரணமடைந்துள்ளாா்.
அணலைதீவு 05ம் வட்டாரத்தினை சோ்ந்த திருமதி வின்சன் சுபத்திரா அவா்கள் சமுக வளா்ச்சிப் பாதையில் அழுத்தமான துணிச்சல் மிக்க சமூகப் பெண் எனவும் பல்வேறு சமுகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி செயற்படுத்தி வந்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவா் தற்போதைய கொரோன வைரஸ் தாக்கத்தின் போது முன்னின்று செயற்படுத்திய பல புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.