திருநாவற்குளத்தில் நான்கு பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதன் போது அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படும் நிலையேற்பட்ட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பல இடங்களிலும் பி சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article