தமிழரசுக்கட்சியின் கொள்கைகளில் மாற்றங்களை உணர்ந்து மாற்றத்திற்கான பாதையா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி 11 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழத் தேசிய முன்னணி அமைப்பானது பல்வேறு தடைகள் தோல்விகள் அனைத்தையும் தாங்கி தங்களது அரசியல் பயணத்தினை தொடர்ந்தார்கள்
அதன் பயனாக 2020ம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 55,000 வாக்குகளைப் பெற்று இரண்டாவது கட்சியாக தேர்வு செய்யப்பட்டதுடன் ஒரு ஆசனத்தினையும் பெற்றுக்கொண்டார்கள் இதில் கட்சியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்
அது போல் கட்சி போட்டியிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்க்பெற்ற வாக்குகளினை அடிப்படையாக கொண்டு தேசியப்பட்டியல் மூலமாகவும் மேலும் ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது அதன் அடிப்படையில் கட்சியின் செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்களும் இணைந்து பாரளுமன்றம் செல்லவுள்ளார்கள்
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலமை ஒன்று தேவை எங்களுக்கு மக்கள் அணை வழங்ககுங்கள் நாங்கள் உங்களுக்கான தீர்வினைப் பெற்று வழங்குவோம் என உறுதி மொழிவழங்கியவர்கள் கட்சியின் முக்கிய இரண்டு குரல்கள் பாரளுமன்றத்தில் சரியாக ஒலிக்கும் என மக்கள் கருதுகின்றார்கள்