டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024 நாளை மறுதினம் ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிரிக்கெட் சம்மேளனம் நடாத்துகின்ற டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL – 9 ) – 2024  மென்பந்து கிரிக்கெட் தொடர் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன் 13)           பி. ப. 2.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாவுள்ளது.

நெடுந்தீவில் உள்ள சகல கிரிக்கெட் வீரர்களையும் உள்ளடக்கி ஏல அடிப்படையில் வீரர்கள்  தெரிவு செய்யப்பட்டு இத் தொடரில் 05 அணிகள் மோதவுள்ளன.

டெல்ப்ட் பிறீமியர் லீக் ( DPL ) – 2024  சீசன் 09 போட்டிகள் யாவும் நெடுந்தீவு மகா வித்தியாலய  மைதானத்திலேயே இடம்பெறவுள்ளதுடன் இப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன்17) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article