ஜனாதிபதி வருகையை முன்னிட்டு யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தேசபந்து தென்னகோனை கைது செய், மக்களின் வாழ்க்கையை அழிக்காதே, கைது செய்தவர்களை விடுதலை செய், ஜனநாயக போராட்டத்தினை தடுத்து நிறுத்தாததே போன்ற கோஷங்களையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் வீதி மறியல் செய்துள்ளனர்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article