முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட அம்பலப்பெருமாள் குளம் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்ப்பதி நிலையத்திற்கு நேற்று (செப்ரெம்பர் 19) முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் உயரதிகாரிகள் களவிஜயம் சென்று அவர்களின் வியாபார முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து காலை 11.00 மணியளவில் அணிஞ்சியன்குளம் GTMS பாடசாலைக்கு களவிஜயம் மேற்க்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுத்திட்டம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு பாடசாலை சமையலறை தொடர்பாகவும் பொறுப்பாசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நண்பகல் 12.00 மணியளவில் நட்டாங்கண்டல் சமுர்த்தி நுண்ணிதிய பயனாளியின் விற்பனை நிலையத்தினை பார்வையிட்டு வியாபார முன்னேற்றம் தொடர்பாகவும் விற்பனை நிலையத்திற்க்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர், உலக உணவுத்திட்டத்தின் உயரதிகாரிகள் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் , துணுக்காய் உதவி பிரதேச செயலாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உலக உணவுத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கந்துகொண்டனர்