வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டவெவ்வேறு வகையான 86 கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன்சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட, அலுத்பார பகுதியில் நேற்றுமுன்தினம் (ஜூலை 21) T56 ரகதுப்பாக்கி மற்றும் அதற்கான 30 தோட்டாக்கள் மற்றும் 5.65 கிராம் ஐஸ்போதைப்பொருளுடன் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் இந்த துப்பாக்கியை வவுனியாவிலிருந்து கொழும்புக்கு கொண்டுவந்துள்ளதாகவும், மற்றுமொரு தரப்பினருக்கு இதனை வழங்கி, குற்றமொன்றைபுரிந்த பின் மீண்டும் வவுனியாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும்பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அதற்கமைய குறித்த சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியாமாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொலிசாரினால் அவருடன்நெருக்கமான மற்றுமொரு சந்தேகநபரை நேற்றையதினம் (ஜூலை22) செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேரியகுளம் பகுதியில் முச்சக்கர வண்டிஒன்றுடன் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குறித்த சந்தேகநபரிடம்மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் செட்டிகுளத்திலுள்ளதுட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள சந்தேகநபரின் வீடுகளில்சோதனையை மேற்கொண்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்தவெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
இதன்போது, பிளாஸ்டிக் பீப்பா ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த வெவ்வேறுவகையான86 கைக்குண்டுகள், 321 ரி56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், 3 கைத்துப்பாக்கிக்கான தோட்டாக்கள், 5,600 போதை மாத்திரைகள் என்பனமீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார்.