சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சதொச நிறுவனம் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைகுறைத்துள்ளது.

அதன்படி 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒருகிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின்விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப்பட்டாணி ஒன்றின் விலைகள்

30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலைஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது

Share this Article