நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நவரட்ணசிங்கம் அவர்களின்117 வது ஜனன தினத்தை நினைவு கூரும் நிகழ்வு ,நேற்று (பெப். 08) நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம்– கனடா , நெடுந்தீவுக் கிளையின் தலைவர் அ.புஸ்பகுமார் தலைமையில் நவரட்ணசிங்கம் கலை அரங்கில்நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தை சோபன்ரூபஸ் அடிகளார் இந்து மதகுரு பிரம்மஸ்ரீ கா. புவனேந்திர சர்மா மற்றும் நெடுந்தீவு மகாவித்தியாலய உப அதிபர் மரியதாஸ்குரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமரர் நவரட்ணசிங்கம் அவர்களின் உருவசிலைக்கு மலர்மாலைஅணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் இருந்து க. பொ. த. சாதாரணதர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த 16 மாணவர்களுக்கும், புலமைப்பரிசில்பரீட்சையில் சித்தியடைந்த 02 மாணவர்களுக்கும், நெடுந்தீவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் குறித்த மன்றத்தால் வழங்கப்படும்கொடுப்பனவினை பெற்று வரும் 86 மாணவர்களுக்குமான கொடுப்பனவுகளும்குறித்த நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.