சிறப்புற இடம்பெற்ற நெடுந்தீவு முனியப்பர் ஆலய மகா திருக்குளிர்த்தி !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலய  மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழா நேற்றைய தினம் (ஜூலை 31) மாலை ஆரம்பமாகி இன்று காலைவரை சிறப்பாக இடம்பெற்றது.

ஆலய  மகா திருக்குளிர்த்தி அபிசேக பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வாக மாலை குயின்ரவர் திடலில் மாட்டு வண்டில் சவாரி இடம்பெற்றது.

தொடரந்து கலைநிகழ்வுகளும் , பொங்கல், தீமிதிப்பு , நேர்த்திப் பொருட்கள் ஏல விற்பனை மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கல் என்பனவும் இடம்பெற்றது.

பெருமளவு பக்கதர்கள் பங்கேற்புடன் இடம்பெற்ற குளிர்த்தி விழாவில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


 

Share this Article