சிறப்புற இடம்பெற்ற அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய பரிசில் தினமும் மலர் வெளியீடும்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய பரிசில் தினமும்  88ஆவது ஆண்டுநிறைவு மலர் வெளியீடும் கடந்த ஜூலை 30 அன்று  வித்தியாலய அதிபர்கோ.பத்மநாதன் தலைமையில் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வேலணை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் . க.பார்த்தீபன்ஆண்டு மலரை வெளியிட்டு வைக்க திருமதி. மங்கையர்க்கரசி நடேசபிள்ளைமுதல் பிரதியைப் பெற்றுக்கொண்டதுடன் நூல் ஆய்வுரையினை ஆசிரிய ஆலோசகர் த.தயாபரன் நிகழ்த்தினார்.

நிகழ்வில் மாணவர்களது பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு சிறப்பான முறையில் பாடசாலை சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article