சிறப்புடன் இடம்பெற்ற நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி இன்றையதினம்  (ஆகஸ்ட்10) காலை 06. 15 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

திருவிழா திருப்பலி நிறைவில் புனித லோறன்சியார் திருச்சொரூப பவனி இடம்பெற்று கொடியிறக்கமும் இடம்பெற்றது. தொடரந்து பக்தர்களுக்கு அருள் வழங்கும் வகையில் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியில்  கலந்து கொண்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதுடன் திருச்சொரூப பவனியின் போது மக்கள் தாகசாந்தி நிலையங்கள் அமைத்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் போக்குவரத்திற்காக செபநாயகபுரம் வியாகுல அன்னை கெபியில்இருந்து பேரூந்து சேவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article