By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சாம்பல் தீவில் விகாரை நிர்மாணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!
Share
Notification
Latest News
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ்ப்பாணம்
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > சாம்பல் தீவில் விகாரை நிர்மாணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!
இலங்கைச் செய்தி

சாம்பல் தீவில் விகாரை நிர்மாணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித சங்கிலிப் போராட்டம்!

Last updated: 2023/09/03 at 7:30 PM
Published September 3, 2023 318 Views
Share
2 Min Read
SHARE

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (செப்ரெம்பர் 03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், பலவாறு கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

முன்னதாக அப்பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிஸாரினால் குறித்த தடையுத்தரவு வாசித்துக் காட்டப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சாம்பல்தீவு பாலத்துக்கு அப்பால் சென்று தமது எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

திருகோணமலை, இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 540 குடும்பங்களைச் சேர்ந்த 2202 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன், இதனை சூழவுள்ள பெரியகுளம், ஆத்திமோட்டை, சாம்பல் தீவு மற்றும் சல்லி போன்ற கிராமங்களில் தமிழர்கள் மட்டுமே காலகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சிங்கள பௌத்தர்கள் இல்லாத இப்பிரதேசத்தில் பௌத்த விகாரை நிறுவப்படுமானால், அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து இன வன்முறைக்கும் வித்திடும் என அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.

இதேவேளை, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க கிழக்கு ஆளுநரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 12ஆம் திகதி பெரியகுளம் சந்திப் பகுதியிலும் 28ஆம் திகதி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஏ6 வீதியை மறித்தும் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, அன்று கச்சேரியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் புகுந்து சில பௌத்த பிக்குகள் குழப்ப நிலையை விளைவித்திருந்தனர் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You Might Also Like

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

Anarkali September 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வவுனியா பொது வைத்தியசாலையிலிருந்து வெளிநாடு பயணம் செய்த 11 வைத்திய நிபுணர்கள்!
Next Article கல்வியங்காட்டு பழவியாபாரி கடத்தலுடன் தொடர்புடைய ஐவர் கைது!- பழவியாபாரியும் மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
செம்மணியில் 33 மனித எச்சங்கள் இன்றுவரை!
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?