கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கல்வி அமைச்சினால் புனரமைக்கப்பட்டகிருஷ்னை படிப்பகம் என்ற ஆசிரியர் கல்விக்கான நூலகத்தினை பிரதமர்ஹரிணி அமரசூரிய திறந்து வைத்தார்.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இன்றையதினம் (பெப். 15) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரியகலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கடல் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் டாக்டர் ஸ்ரீ பவானந்தராஜாஇஸ்ரூபாய கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவேவா வடக்கு மாகாணபிரதம செயலாளர் இ. இளங்கோவன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின்செயலாளர் பற்றிக் டிரஞ்சன் இஸ்ருபாய கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்உதார ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் இரோசினி பரணகம வடக்குமாகாண கல்வி பணிப்பாளர் பிரெட்லீ கலாசாலையின் முன்னாள் அதிபர்கள்விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்வி சமூகத்தினர் பலர் கலந்து கொண்டனர்
பிரதமர் ஒருவர் கலாசாலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டமை கலாசாலைவரலாற்றில் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது