கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்!- யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (ஓகஸ்ட் 12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்று பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்று திருமணச் சடங்கிற்கு சென்றிருந்த நிலையில் குடும்பஸ்தர் தனியாக வீட்டில் இருந்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article