குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் தருமபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று(ஒக்ரோபர் 13) வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் ஏ-35 வீதியில் உள்ள பனை ஒன்றில் இருந்த குளவிகள் கலைந்து வீதியால் பயணித்தவர்களைத் தாக்கியுள்ளன.
பாடசாலை மாணவன், மாற்றுத் திறனாளி உட்பட 7 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த இடத்தில் பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், குளவிக் கூட்டை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.