கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர்
மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த டிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை இன்று (டிசம்பர்25) இரவு மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம் பெற்றபகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவுதூரம் இழுத்து சென்றுள்ள்து வாகன சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும்படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.