சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08) காலை கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இணைந்து தீச்சட்டி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.