கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவா் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று ( டிசம்பா் 26) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே கொல்லப்பட்டுள்ளார். என இனம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும் கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இனம் தொியாத நபரால் ஒருவா் குத்திக் கொலை செய்யதமை யாவரும் அறிந்ததே

Share this Article