கிரிக்கெற் கிண்ணம் வென்றது சென் பற்ரிக்ஸ் அணி – Bishop cup 2024 போட்டித் தொடர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop cup 2024 போட்டித் தொடரின் கிரிக்கெற் இறுதியாட்டத்தில் சென் பற்ரிக்ஸ் அணி எதிர் சென் மைக்கல் அணி ஆகிய அணிகள் மோதியதில் சென் பற்றிக்ஸ்   அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணம் – 2024 இனை தனதாக்கிக்கொண்டது.

கிரிக்கெற் சுற்றுத்தொடர்களில் பலமான அணிகளுடன் மோதி சென்  பற்ரிக்ஸ்அணியும் , சென் மைக்கல் அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வாகிய  நிலையில்  சென் மைக்கல் அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று  துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது சென் மைக்கல் அணி  10 ஓவர் நிறைவில் 08 விக்கெற்றுகளை இழந்து  63 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் பற்ரிக்ஸ் அணி 10 ஓவரில்    67 ஓட்டங்களை பெற்றது இதனடிப்படையில்   04 ஓட்டங்களால் சென் பற்ரிக்ஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

தொடர் ஆட்டநாயகன்-  நளின் (சென் பற்ரிக்ஸ்) சிறந்த பந்து வீச்சாளர் – றகீம் லயோன் (சென் மைக்கல்) சிறந்த துடுப்பாட்டவீரர்- ஜெலக்ஸ் (சென் மைக்கல்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Share this Article