காற்றாலை மின்சார திட்டம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலைமின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகளின் முன்னேற்றங்களை நேற்றையதினம் (ஆகஸ்ட்08) பார்வையிட்டு சென்றுள்ளனர் இந்திய துணைத்தூதரக அதிகாரிகள்.

நெடுவூர்த் திருவிழா 2024 இல் கலந்து கொள்வதற்காக வந்திருந்த யாழ் இந்திய துணைத்தூதர் , மற்றும் தூதரக அதிகாரி அடங்கிய குழுவினரே இத்திட்டத்தினை பார்வையிட்டுச் சென்றனர்.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய தனியார் நிறுவனத்தின்  நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையே பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article