காரைநகர் பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள 428 வீதிகளையும் தகவல் தொழில்நுட்ப முறைமையின்(GIS) முறையில் வீதித் தரவுகளை உள்ளடக்கி வீதி தொடர்பான சகல தரவுகளையும் உள்ளடக்கியவாறான தரவுக்கட்டமைப்பினை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல் நேற்று(டிசம்பர் 19) மதியம் 1:00 மணியளவில் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,உதவி ஆணையாளர், துறைசார் அதிகாரிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயற்றிட்டத்தின் மூலம் வீதி வலையமைப்பு தொடர்பான சகல தரவுகளையும் ஒருங்கே கண்காணிக்க முடிவதுடன் வடமாகாணத்தில் முதலாவதாக அமுல்படுத்தும் வீதிவலையமைப்புத் திட்டத்தில் முதன்மை பெறுகின்றது எனலாம்.