காரைநகர் பிரதேசத்திலுள்ள சாம்பலோடை, ஆலங்கன்று மயானங்களின் அபிவிருத்தி தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று (ஜூன் 19) காரைநகர் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
* அபிவிருத்திச் சபைகளின் நேரடிக் கண்காணிப்பில் இயக்குதல்.
* மயானங்களில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தல்.
* கட்டண முறை அமுலாக்குதல்.
* மயானங்களில் சிறந்த பராமரிப்பு பேணல்.
* மயானங்களில் கழிவகற்றல் மேற்கொள்ளல்.
* மயானச் சூழலை பசுமையாக்கல்.
* மயானத்தினை அழகுபடுத்தல்.
இந்தச் செயற்பாட்டினை சபையின் கண்காணிப்புடன் முன்னெடுப்பதற்கு ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.