காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட இந்துக்கல்லூரி, யாழ்ரன் கல்லூரி, மெய்கண்டான் வித்தியாலயம், வேதரைப்பு ஸ்ரீகணேசா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகளுக்கு வர்ணக்கழிவுத் தொட்டிகள் நேற்று (ஒக்ரோபர் 11) சபையின் செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
“பசுமை படைத்த நமது உலகினை குப்பையில்லா நகரமாக்க திண்மக்கழிவு முகாமைத்துவத்தை சிறுவர்களிடத்தில் இருந்து ஆரம்பிப்போம்” என்னும் எண்ணக்கருவிற்கு அமைய இந்த வர்ணக்கழிவுத் தொட்டிகள் வழங்கப்பட்டன.
உலகளாவியரீதியில் திண்மக்கழிவு முகாமைத்துவம் பேரிடராக காணப்படுகின்றது. எனவே சபையின் செயற்பாட்டில் திண்மக்கழிவுச் செயற்பாடு முக்கிய துறையாக இருப்பதால் முறையான திண்மக்கழிவை தரம்பிரிப்பதன் மூலம் கழிவகற்றலை இலகுபடுத்தமுடியும்.
எனவே மாணவர்களிடையே திண்மக்கழிவை ஊக்கப்படுத்துதன் மூலம் சமூகரீதியாகவும் மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியும். அந்த வகையில் திண்மக்கழிவுச் செயற்பாட்டினை பாடசாலை மட்டத்தில் பரீட்சார்த்தமான முறையில் முன்னெடுப்பதற்கு இவ் செயற்றிட்டம் பங்கு வகிக்கின்றது.
சபையின் பூரண நிதிப் பங்களிப்பின் மூலம் இவ் கழிவுத் தொட்டி வழங்கல் செயற்பாடு பாடசாலை சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.